தஞ்சாவூர் நகரம் சத்திரம் நிர்வாகம் அரசர் தொடக்கப் பள்ளியில் தஞ்சாவூர் சோழா லயன்ஸ் சங்கம் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஆகியோருடன் காமராஜர் கல்வி வளர்ச்சி நாள் விழா நடைபெற்றது
தஞ்சாவூர் நகரம் சத்திரம் நிர்வாகம் அரசர் தொடக்கப் பள்ளியில் தஞ்சாவூர் சோழா லயன்ஸ் சங்கம் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஆகியோருடன் காமராஜர் கல்வி வளர்ச்சி நாள் விழா நடைபெற்றது.
விழாவில் தஞ்சாவூர் சோழா லயன்ஸ் சங்க தலைவர் MJF.Ln.முனைவர்I.சேவியர், செயலர் Ln l.செந்தில்குமார், துணை செயலர்Ln.K.மதியழகன்மற்றும் முன்னாள் மாணவர் கிரண் குமார் தந்தை,அக்காள் மற்றும் பாபு, கண்ணன், சதிஷ் குமார்ஆகியோர் கலந்து கொண்டனர். ஆசிரியை நா.இர.விடுதலைச்செல்வி வரவேற்றார். விழாவின் தொடக்கமாக பள்ளியில் மரக் கன்றுகள் நடப்பட்டது..பள்ளி தலைமை ஆசிரியர் மீ.குமார் முன்னிலை வகித்தார். தஞ்சாவூர் சோழா லயன்ஸ் சங்கம் சார்பில் மாணவர்களுக்கு எழுது பொருள்கள், நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது. முன்னால் மாணவர்கள் சீருடைகள் மற்றும் காலுறைகள் ஆகியவற்றை வழங்கினர். தஞ்சாவூர் சோழா லயன்ஸ் சங்க தலைவர் பேசுகையில், காமராஜர் எத்தனையோ தலைமுறை தாண்டியும் அனைவர் மனதிலும் வாழ்ந்து கொண்டு உள்ளார்.கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர் .சாதாரண குடும்பத்தில் இருந்து முதலமைச்சர் ஆனவர்.உழைப்பு,விடாமுயற்சி உடையவர் .அவர் ஏற்படுத்தி கொடுத்த கல்வி கூடங்கள் அனைவருக்கும் பயன் பெறும் வகையில் இருந்தது என்று கூறினார். .காமராஜர் கல்வி வளர்ச்சி நாள் தொடர்பாக நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.இப்பள்ளியின் முன்னாள் ஆசிரியர் பானுமதி மற்றும் பெற்றோர்களும் ஏராளமானோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். விழா நிறைவாக ஆசிரியர் ரா.தாமரைச்செல்வி நன்றி கூறினார்.
காமராஜரின் மதிய உணவுத் திட்டத்தைச் சிறப்பிக்கும் வகையிலும் அந்தத் திட்டம் பற்றி மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையிலும் அனைத்து மாணவர்களுக்கும் பொங்கல் மற்றும் சுண்டல் ஆகியவை வழங்கப்பட்டு கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது.



















Comments
Post a Comment