Posts

Showing posts from February, 2022

28 பிப்ரவரி நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் மாணவர்களுக்கு விளக்கம் அளித்த மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திருமதி சந்திரா அவர்கள்....

Image
  28 பிப்ரவரி நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் மாணவர்களுக்கு விளக்கம் அளித்த மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திருமதி சந்திரா அவர்கள் .... 28 பிப்ரவரி தஞ்சாவூர் நகரம் சத்திரம் நிர்வாகம் அரசர் தொடக்க பள்ளியில் இணையம் மூலம் நடை பெற்ற  வரைதல் போட்டியில் பங்கு கொண்டு முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகளை தஞ்சாவூர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திருமதி சந்திரா அவர்கள்  வழங்கினார்.அவர்கள் மாணவர்களுக்கு நல்ல தொடுதல்,கெட்ட தொடுதல் பற்றி மாணவர்களிடம் கேள்விகள் கேட்டு அதைப் பற்றி விரிவாக எடுத்து கூறினார்.இந் நிகழ்வில் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திரு வேலாயுதம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இதற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் மீ.குமார் மற்றும் ஆசிரியைகள் செய்திருந்தனர்

🔴🔴 விளையாட்டு பயிற்சியில் ஆர்வத்துடன் ஈடுபடும் மாணவ, மாணவிகள்

Image
  🟢🟢 நீண்ட நாட்களுக்கு பிறகு மாணவர்கள் விளையாட்டுகள் சொல்லிக் கொடுக்கப்பட்டு மிக ஆர்வத்துடன் விளையாட்டு பயிற்சியில் ஈடுபடும் அரசர் தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியைகள்...

🟢🟢 இல்லம் தேடிக் கல்வியில் ஒருங்கிணைப்பாளர் CSO, மற்றும் ஆசிரிய பயிற்றுநர்கள்

Image
  🟣🟣 இன்று அரசர் தொடக்கப் பள்ளியின் இல்லம் தேடிக் கல்வி மையத்தை ஒருங்கிணைப்பாளர் திரு பெர்னாட்ரின்,  திரு ரமேஷ் CSO மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள்  திரு சிவகுமார் மற்றும் திருமதி ஷோபா பார்வையிட்டார்கள்.   பார்வையின் போது பள்ளி தலைமை ஆசிரியர் மீ.குமார் உடன் இருந்து இல்லம் தேடிக் கல்வி சம்பந்தமான அனைத்து விவரங்களையும் எடுத்துக் கூறினார்

🟣🟣 நேரடி வகுப்பு உற்சாகத்தில் மாணவ, மாணவிகள்....

Image
  🟣🟣 நேரடி வகுப்பு உற்சாகத்தில் மாணவ, மாணவிகள்.... தஞ்சாவூர் நகரம் சத்திரம் நிர்வாகம் அரசர் தொடக்கப் பள்ளியில் இன்று 01.02.2022 பள்ளி திறந்ததும் மாணவர்கள் ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் பள்ளிக்கு வருகை தந்தனர். பள்ளி மற்றும் ஆசிரியர்களை பார்த்தவுடன் ஆர்வத்துடன் வணக்கம் கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.       அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி வெப்பநிலை மானி,சானிடைசர் பயன்படுத்தப்பட்டது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் செய்திருந்தனர்.